"ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது, திமுக அரசு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கிய திமுக, இப்போது அதிமுக மீது பழிபோடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார் .
x
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சங்கரப்பேரி மைதானத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . அதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு வலிமை , வளம் பெற மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று கூறினார். அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் மிரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக மீது திமுக பழி போடுவதாகவும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு செய்ல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 40 தொகுதிகளிலும் 
அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்