பாஜக, காங்கிரஸ்... யார் மாற்று..?

பாஜகவில் மோடி, காங்கிரசில் ராகுல்காந்தி இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாகவும், பிரதமர் வேட்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார் மம்தா பானர்ஜி.
பாஜக, காங்கிரஸ்... யார் மாற்று..?
x
மேற்கு வங்க மக்களால் தீதி என அன்பா அழைக்கப்படுறவங்க தான் மம்தா பானர்ஜி... மாநிலத்தோட முதல்வராகவும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோட நிறுவன தலைவராகவும் இருக்குறாங்க மம்தா.. அரசியல்ல பெண் தலைவர்கள்ல இவருக்குனு தனி இடம் இருக்குன்னு தான் சொல்லணும். சட்டம் படித்த மம்தா, 1970 ல அரசியலுக்குள்ள வந்தாங்க... 

1976ல மேற்கு வங்க மகளிர் காங்கிரசில பொதுச் செயலாளராக உயர்ந்த மம்தா, 1984ல நாடாளுமன்ற உறுப்பினரா தேர்வானாங்க... அப்போ நடந்த தேர்தல்ல மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்த்து ஜாதவ்பூர் தொகுதியில நின்னு பெருவாரியான வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சாங்க.. அதுக்கப்புறம் காங்கிரஸ் கட்சியில படிப்படியா உயர்ந்த மம்தா, தொடர்ந்து நடந்த எல்லா தேர்தல்லயும் ஜெயிச்சு மேற்கு வங்கத்தோட முகமாகவே மாறிட்டாங்க... 

காங்கிரசில் இருந்து விலகிய மம்தா, 1997ல அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்குனாங்க.. மாநிலத்தோட பிரதான எதிர்க்கட்சியாக தன்னோட கட்சியை அவங்க நிலைநிறுத்துனாங்க.. இன்னிக்கு பாஜகவுடன் எதிரும் புதிருமாக இருந்துவரும் மம்தா பானர்ஜி 1998ல முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் சேர்ந்து அங்கம் வகிச்சாங்க... 

1999ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்த மம்தா, மத்திய அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேத்துக்கிட்டாங்க... 2001 ல பாஜகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தன்னோட பதவியை ராஜினாமா செய்த மம்தா, மறுபடியும் 2004 ல மத்திய எரிசக்தி துறை அமைச்சரானாங்க.. 2009 ஆம் ஆண்டு மறுபடியும் காங்கிரஸ் கூட்டணியில சேர்ந்த மம்தா, மறுபடியும் ரயில்வே துறை அமைச்சரா 2வது முறையா பதவி ஏத்துக்கிட்டாங்க...

அதிவேக துரந்தோ ரயில், இளைஞர்களுக்கான யுவா ரயில், பெண்களுக்கான சிறப்பு ரயில் இதெல்லாம் மம்தாவோட திட்டத்துல வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுச்சு.. மேற்கு வங்கம் இடதுசாரி முன்னணியின் கோட்டையா இருந்த நிலையில, 2011ல நடந்த சட்டமன்ற தேர்தல்ல, மொத்தம் 294 தொகுதியில 184 இடங்களை பிடிச்சு தன்னோட கட்சிக்கு தனி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தாங்க.. 

2011 ல மேற்கு வங்க மாநிலத்தோட முதலமைச்சராக மம்தா பானர்ஜி பொறுப்பேத்துக்கிட்டாங்க.. காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 2009-ல் 19 இடங்களையும், 2014-ல 34 இடங்களையும் மம்தா கைப்பற்றி இந்திய அளவில முக்கியக் கட்சியா தன் கட்சியை கொண்டு சேர்த்தாங்க..2016ல நடந்த தேர்தல்ல யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 216 தொகுதிகள்ல வென்று மறுபடியும் மாநிலத்தோட முதலமைச்சரா ஆனாங்க மம்தா... 

கடந்த தேர்தல் வரை இடதுசாரிகளுக்கும், மம்தாவுக்கும்தான் போட்டின்னு இருந்த நிலையில் இப்ப அது மாறி பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குமான போட்டியா மாறிடுச்சு...பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டையும், குறிப்பாக மோடிக்கு எதிராக தனது குரலையும், கரங்களையும் மம்தா வலுப்படுத்திட்டு வர்றாங்க... 

இந்திய அளவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து கல்கத்தாவுல மம்தா நடத்திய மாநாடு அதற்கு சாட்சி.. பாஜக பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்யவிடாமல் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்தது இதெல்லாம் பாஜகவை அவர் எதிர்த்ததற்கு உதாரணமா நடந்தேறிய சம்பவங்கள்... 

இந்த முறை தேர்தல்ல 42 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவிச்சு இருக்குற மம்தா பானர்ஜி, 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துருக்காங்க.. கடந்த முறை போட்டியிட்டவங்கள்ல 17 பேருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுத்துருக்காங்க.. பாஜகவை கடுமையா எதிர்க்குற மம்தா, காங்கிரஸை அந்த அளவுக்கு வெளிப்படையா எதிர்க்குறதில்லை.. 

ஆனா காங்கிரஸ் தவிர்த்த எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி கல்கத்தாவுல மெஜாரிட்டி காட்டுனாங்க... இதன் மூலமா பாஜக, காங்கிரஸ் தவிர்த்த பிரதான கட்சியா, 3வது முகமா தன்னை வெளிப்படுத்தும் மம்தா, குழப்பமான சூழல் வரும் போது தன்னை பிரதமர் வேட்பாளராக கொண்டு போறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுத்துட்டு இருக்காங்க... 

Next Story

மேலும் செய்திகள்