"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.
x
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடசென்னை தொகுதியில் போட்டியிடும்  தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ்,  பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ராஜேஷை ஆதரித்து, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் ரயில்வே பாலங்கள் கட்டுவதில் அதிக காலதாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார். ஏழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்துவதுதான் திமுகவின் வாடிக்கை என்றும் முதலமைச்சர் 
புகார் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகைமின் மாநிலமாக மாறியுள்ளதாகவும், சென்னையில் இயற்கை சீற்றங்கள் வந்தாலும் மின்தடை ஏற்படாத அளவிற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்   முதலமைச்சர் தெரிவித்தார். 

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
 தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழ்வதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்