அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்படும் என்று அமமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
x
அம்மா மக்கள் முன்னேற்றே கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன்  வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை எனவும், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயக் கடன்கள், மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்கள்  ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் எனவும், தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்படும் எனவும், நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அமமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச வை-ஃபை வசதி வழங்கப்படும் எனவும் கல்லூரி, மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படும் எனவும் கச்சத்தீவை திரும்பப்பெற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்