அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...
பதிவு : மார்ச் 17, 2019, 12:44 PM
மாற்றம் : மார்ச் 17, 2019, 01:28 PM
அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் அந்த கட்சிகள் சார்பாக கையெழுத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார். 
அதிமுகவுக்கு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர். தேனி, மதுரை,நீலகிரி, திருநெல்வேலி.நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்சென்னை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாமகவுக்கு தருமபுரி, விழுப்புரம்,அரக்கோணம்,கடலூர்,மத்திய சென்னை திண்டுக்கல்,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு கன்னியாகுமரி,சிவகங்கை,கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி,திருச்சி, விருதுநகர்,  வடசென்னை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு தஞ்சை தொகுதியும், புதிய நீதிகட்சிக்கு வேலூர் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. "அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும்" - பன்னீர்செல்வம் தகவல்

அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின், தொகுதி பட்டியலை வெளியிட்ட அவர், செய்தியாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, இந்த தகவலை வெளியிட்டார். 

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தெரிவித்த கருத்துகள்.

"எங்கள் கூட்டணியின் ஒரே கொள்கை நாட்டின் வளர்ச்சியே" - ஹெச். ராஜா


பாமக, தேமுதிக நிர்வாகிகள் ஏன் வரவில்லை...? - தமிழிசை விளக்கம்

தொடர்புடைய செய்திகள்

கருப்புப் பணம் ஒழிப்பு என்னாச்சு?" பிரசாரத்தில் கனிமொழி கேள்வி

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

36 views

"திமுக தேர்தல் அறிக்கை: விமர்சிக்கும் உரிமை பாஜகவுக்கு உள்ளது" - தமிழிசை

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை பா.ஜ.க-வுக்கு இருப்பதாக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவி்த்தார்.

82 views

திமுக தேர்தல் அறிக்கை பொய்யான மாயை தேர்தல் அறிக்கை - தமிழிசை

தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை ஆட்சியில் இருந்தபோது செய்யாத‌து ஏன் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

20 views

பிற செய்திகள்

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

12 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

9 views

"காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன்" - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

11 views

கோயில்களில் கொள்ளையடித்த 3 இளைஞர்கள் : இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ஒசூர் அருகே கம்பள்ளி, காளிநாயக்கனப்பள்ளி, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள கோயில்களில் 3 இளைஞர்கள் திருடியுள்ளனர்.

18 views

சுங்க சாவடியில் பரபரப்பு - வேல்முருகன் போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சுங்கச் சாவடி ஊழியர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் மதுராந்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

68 views

இந்து அமைப்பு நிர்வாகி காருக்கு தீ வைப்பு : முன்விரோதம் காரணமாக தீ வைப்பா எனவும் போலீஸ் விசாரணை

கோவை கண்ணப்பன் நகரை சேர்ந்த சீனிவாசன், பாரத் சேனா அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.