திமுக நேர்காணல் : யாருக்கு வாய்ப்பு?

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் திமுக வேட்பாளர் நேர்காணல் நாளை தொடங்கவுள்ள நிலையில், அங்கு விருப்பமனு தாக்கல் செய்துள்ள முக்கியமானவர்களின் விவரங்கள்...
x
நாடாளுமன்ற தேர்தல், 21 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், விருப்பமனு தாக்கல் செய்தவர்களை நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்த இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, தி.மு.க மூத்ததலைவர்கள் பலரின் வாரிசுகள் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட டி.ஆர்.பாலுவும் விருப்பமனு அளித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மத்திய சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நீலகிரி தொகுதியிலும், ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தஞ்சாவூர் தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து, கடலூர் நகர செயலாளர் தண்டபானி மனு அளித்துள்ளர். இது தவிர,  தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்ககாண்டின் தென் சென்னை தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வடசென்னையிலும், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியிலும், பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி கள்ளக்குறிச்சியிலும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு சேலம் தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்