பா.ம.க - அதிமுக கூட்டணிக்கு கொள்கை கிடையாது - வசந்தகுமார் கருத்து

பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக தேர்தல் கூட்டணிக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் வசந்தகுமார் கூறியுள்ளார்.
பா.ம.க - அதிமுக கூட்டணிக்கு கொள்கை கிடையாது - வசந்தகுமார் கருத்து
x
பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக தேர்தல் கூட்டணிக்கு  கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் வசந்தகுமார் கூறியுள்ளார். கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக்குவோம் என கூறி வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டு எந்த முகத்துடன் வெளியே வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், அவர்கள் அரசியலை வியாபாரமாக்கி விட்டார்கள் என்றும் கூறினார்.  அதிமுகவை தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்த பா.ம.க.வினர், இன்று பணத்திற்காக கூட்டணி சேர்ந்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்