சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா? திருமாவளவன் விளக்கம்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா என்ற கேள்விக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்
x
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தான், மீண்டும் போட்டியிடுவது குறித்து, வரும் 4-ம் தேதி முடிவு செய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜாநந்தாவின் 129-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன், சகஜாநந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் 4-ம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்