பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை - வழக்கு விபரம்

பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு குறித்த விபரத்தை இப்போது பார்க்கலாம்...
பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை - வழக்கு விபரம்
x
ஒசூர் அருகே ஜி மங்கலம் கிராமத்தில் 1998 ஆம் ஆண்டு சாராயம்  விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் பாகலூர் போலீசார் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பிற்கு எதிராகவும் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. 

இந்த சம்பவத்தில் பாகலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சேகர் என்ற ஏட்டு காயமடைந்தார். அதேபோல் ஜி.மங்கலத்திலிருந்து போலீசாரின் ஜீப்பை துரத்தி சென்ற போராட்டக்காரர்கள் பாகலூர் பகுதியில் அதற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் போலீசாருக்கு எதிராக செயல்பட்டு ஜீப்பை எரித்ததாக 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதில் பாலகிருஷ்ண ரெட்டி 94 ஆவது நபராக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.எ.க்களை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்