பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் - தண்டனை நிறுத்தி வைப்பு...

அரசு பேருந்து மீது கல்வீசிய வழக்கில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்ததை கண்டித்து கடந்த 1998 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அப்போது பாஜகவில் இருந்த பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 108  பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, பாலகிருஷ்ணரெட்டி அதிமுகவில் இணைந்து அமைச்சரானார். இதையடுத்து, இந்த வழக்கு, சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பளித்தார். அப்போது, பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 16 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக  தண்டனையை நிறுத்தி வைத்து உடனடியாக ஜாமின் வழங்கினார்.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு பதவி பறிபோனது


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை - மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை - வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து  


பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிபோனது - முதல்வர் ஆலோசனை


பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிபோனது - அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து


பாலகிருஷ்ண ரெட்டிக்கு  பதவி பறிபோய் விட்டது - மூத்த வழக்கறிஞர் விஜயன்



Next Story

மேலும் செய்திகள்