எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் - கனிமொழி

ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் 2 பெண்கள் பாதிக்கப்பட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
x
எய்ட்ஸ் பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தால் 2 பெண்கள் பாதிக்கப்பட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி, திமுக சார்பில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்