விலையில்லா பொருட்களை விபரீதமாக சித்தரிப்பது தவறு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விலையில்லா பொருட்களை விபரீதமாக சித்தரித்து மக்களிடத்தில் விஷத்தை தூவுவது தவறான செயல் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விலையில்லா பொருட்களை விபரீதமாக சித்தரிப்பது தவறு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பங்கேற்று, பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சர்கார் திரைப்படத்தில் விலையில்லாமல் கொடுக்கிற பொருட்களை விபரீதமாக சித்தரித்து மக்களிடத்தில் விஷத்தை தூவுவது தவறான செயல் என்று தெரிவித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் இருந்தார்கள் என்று தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அன்றே இலவச திட்டங்களை விஜய் ஆதரித்ததாகக் குறிப்பிட்டார்.



Next Story

மேலும் செய்திகள்