பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

பொருட்கள் மற்றும் சேவை வரிக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
x
பொருட்கள் மற்றும் சேவை வரிக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காதிப்பொருட்கள், கைத்தறி பொருட்கள், கோரைப்பாய், பாக்கு தட்டு, மெழுகுவர்த்தி உள்ளிட்ட 72 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவேண்டும் என்றும் 10 சேவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என இன்றைய கூட்டத்தில் கோரிக்கை வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்