தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இல்லை - அன்புமணி ராமதாஸ்

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. தற்போது இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இல்லை - அன்புமணி ராமதாஸ்
x
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இல்லை

பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா சென்னை தி.நகரில் உள்ள பா.ம.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சிக் கொ​டியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். இதையடுத்து, ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர்  அன்புமணி இருவரும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 3 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்த கட்சி பா.ம.க. எனவும், தமிழக மக்களுக்காக முதலில் குரல் கொடுப்பது பா.ம.க. தான் என்றும் கூறினார். வருங்காலத்தில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைக்கும் என கூறிய அன்புமணி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாமக  நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்