விஜயவாடா தீ விபத்து - குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

விஜயவாடாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நிகழ்ந்த தீ விபத்து குறித்த செய்தி அறிந்த பின்னர், துக்கத்தில் சிக்கியதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
விஜயவாடா தீ விபத்து - குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
x
விஜயவாடாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நிகழ்ந்த தீ விபத்து குறித்த செய்தி அறிந்த பின்னர், துக்கத்தில் சிக்கியதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், தமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளதாகவும்,   காயமடைந்தவர்களை விரைவாக மீட்க விரும்புவதாகவும், ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

விஜயவாடா தீ விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிலைமை குறித்து தொலைபேசி மூலம், கேட்டறிந்தார். மற்றும் அனைத்து உதவிகளும் செய்ய தயார் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.  


விஜயவாடா தீ விபத்து - மத்திய அமைச்சர் அமித்ஷா வேதனை

தீ விபத்து குறித்து ஆழ்ந்த வேதனை ஏற்பட்டுள்ளதாக உள்துறைஅமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், மாநில அரசுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு உறுதி செய்வதாகவும், துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். காயமடைந்தவர்களை விரைவாக மீட்க பிரார்த்தனை செய்வதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார் 


Next Story

மேலும் செய்திகள்