ஐதராபாத் நகருக்குள் புகுந்தது கருஞ்சிறுத்தையா?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கோல்கொண்டா கோட்டை பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடுவதாக கூறி அதிகாலையில் அங்கிருந்தவர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஐதராபாத் நகருக்குள் புகுந்தது கருஞ்சிறுத்தையா?
x
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கோல்கொண்டா கோட்டை பகுதியில்  கருஞ்சிறுத்தை நடமாடுவதாக கூறி அதிகாலையில் அங்கிருந்தவர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த வந்த வனத்துறையினர் அந்த கருஞ்சிறுத்தையை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அது வீட்டின் மேல் பகுதியில் உள்ள கூரைகளை கடந்து ஒவ்வொரு வீடாக கடந்து சென்றது. இந்நிலையில் வனத்துறையினர் துப்பாக்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி சுட்டு பிடித்தனர். அப்போது தான் அது கருஞ்சிறுத்தை அல்ல ஒரு வகையான காட்டுப் பூனை என்பது தெரிய வந்தது.  இதனால் அதிகாலையில் இருந்து ஐதராபாத்தில் நீடித்து வந்த அச்சம் முடிவுக்கு வந்தது.

Next Story

மேலும் செய்திகள்