நரேந்திர மோடி அரசுக்கு விஜய் மல்லையா திடீர் பாராட்டு

மத்திய பா.ஜ.க அரசுக்கு விஜய் மல்லையா திடீர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் 100 சதவீதம் கடனை திருப்பிச் செலுத்த தாம் தயாராக உள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நரேந்திர மோடி அரசுக்கு விஜய் மல்லையா திடீர் பாராட்டு
x
20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் தொகுப்பை அறிவித்த மத்திய  அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள விஜய்மல்லையா, தான் வங்கிகளில் வாங்கியுள்ள உள்ள கடனை 100 சதவீதம் திருப்பித் தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த தொகையை பெற்றுக் கொண்டு மத்திய அரசு, தம்மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமது பதிவில் கோரியுள்ளார்.   தம்மை போன்றவர்கள் திருப்பிச் செலுத்த நினைக்கும் கடன் தொகையை மத்திய அரசு தொடர்ந்து வாங்க மறுத்து வருவது ஏன் என்றும் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். நிபந்தனையில்லாமல் பணத்தை பெற்றுக் கொண்டு, தம்மீதான வழக்கை முடிக்க வேண்டும் எனவும் மல்லையா கோரியுள்ளார். 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ஏய்ப்பு புகாரில் சிக்கிய மல்லயா தற்போது இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்