"ஆசிரியர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் விடைத்தாள்கள்" - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

நடந்துமுடிந்த சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி, ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் விடைத்தாள்கள் - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்
x
இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஏற்கனவே நடத்தப்பட்ட சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளின் விடைத்தாள்களை, மதிப்பீட்டிற்காக  வரும் ஞாயிற்று கிழமை முதல் ஆசிரியர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தம்173 பாடங்களில் 2.5 கோடி விடைத்தாள்களை விரைவில் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர்,  ஜூலை 1 முதல் 15 வரை, மற்ற 29 பாடங்களின் தேர்வுகள் முடிந்தவுடன், விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். விடைத்தாள் திருத்தும் பணியானது, 50 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்