ஹைட்ராக்ஸி குளோரோ குயின் உற்பத்தி அதிகரிப்பு

கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் உற்பத்தி தற்போது 30 கோடி மாத்திரைகளாக அதிகரிப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோ குயின் உற்பத்தி அதிகரிப்பு
x
கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் உற்பத்தி தற்போது 30 கோடி மாத்திரைகளாக அதிகரிப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், 16 கோடி மாத்திரைகள் சந்தையில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. 35 லட்சம் ஆர்டி- பி.சி.ஆர் கருவிகளுக்கான தேவை உள்ளதாகவும்,  21 லட்சத்து 35 ஆயிரம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, தற்போதுவரை 13 லட்சத்து 75 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  பாதுகாப்பு கவச உடைகளுக்கான தேவை 2 கோடியே ஒரு லட்சமாக உள்ள நிலையில்,  2 கோடியே 22 லட்சம் உடைகள் ஆர்டர் செய்துள்ளதாகவும், அவற்றில் ஒரு கோடியே 42 லட்சம் உடைகள் உள்நாட்டு சந்தையில் கிடைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்