சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் இல்லை - வணிக வளாகம், போக்குவரத்து தடை தொடரும்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் இல்லை - வணிக வளாகம், போக்குவரத்து தடை தொடரும்
x
சிவப்பு மண்டல பகுதிகளில் ஆட்டோ, கார்  உள்பட  அனைத்து வகை போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், பின் இருக்கையில் பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தொழிற்பேட்டைகள் அனுமதியுடன் இயங்கலாம். வணிக வளாகங்கள், அங்காடிகள் திறப்பதற்கு தடை தொடர்கிறது. குடியிருப்புகளில் உள்ள கடைகள், தனியாக உள்ள கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம். சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் இ-காமர்ஸ் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும், மீதம் உள்ள ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து பணியாற்றலாம். சிவப்பு மண்டல ஊரகப் பகுதிகளில் அனைத்து சுகாதார சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகள் தவிர பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்