கேரள அரசு ஊழியர்களின் சம்பள பிடித்தத்திற்கு தடை - 2 மாதங்கள் இடைக்கால தடை விதித்தது கேரள நீதிமன்றம்

கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை பிடித்தம் செய்யும் நடவடிக்கைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கேரள அரசு ஊழியர்களின் சம்பள பிடித்தத்திற்கு தடை - 2 மாதங்கள் இடைக்கால தடை விதித்தது கேரள நீதிமன்றம்
x
கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை பிடித்தம் செய்யும் நடவடிக்கைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் 6 நாட்களுக்கான ஊதியம் வீதம் 5  மாதங்கள்  பிடித்தம் செய்யப்படும் என கேரள அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து அரசு ஊழியர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என கருத்து தெரிவித்தது. மேலும் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் உத்தரவுக்கு 2 மாதங்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டு வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்