"லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்துவது இயலாத காரியம்" - கொரோனா தொடர்பாக மம்தா பானர்ஜி கருத்து

லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்துவது இயலாத காரியம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்துவது இயலாத காரியம் - கொரோனா தொடர்பாக மம்தா பானர்ஜி கருத்து
x
லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்துவது இயலாத காரியம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு என சில வரம்பு உள்ளதாகவும், ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்துவது முடியாத காரியம் என்றும், அவர் கூறியுள்ளார். கொரோனா உறுதியான நபர் தமது இல்லத்தில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி இருந்தால், அவர் அங்கேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஓரு பக்கம் ஊரடங்கை கடுமையாக்குமாறு மத்திய அரசு கூறுவதாகவும், மறுபுறம் கடைகளை  திறக்க சொன்னால் மாநில அரசால் என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவசரமாக முடிவு எடுப்பதை கைவிட்டு மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் மம்தா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்