ஆசையாய் வளர்த்த ஆட்டை விற்று நிவாரண நிதி : கேரள பெண்ணில் செயலுக்கு மக்கள் பாராட்டு

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கேரள அரசு, பொதுமக்களிடம் நன்கொடை பெற்று வருகிறது.
ஆசையாய் வளர்த்த ஆட்டை விற்று நிவாரண நிதி : கேரள பெண்ணில் செயலுக்கு மக்கள் பாராட்டு
x
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கேரள அரசு, பொதுமக்களிடம் நன்கொடை பெற்று வருகிறது. கோடீஸ்வரர்கள் முதல் ஏழைகள் வரை தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கொல்லம் நகரத்தை சேர்ந்த சுபைதா என்ற 60 வயது பெண், தான் ஆசையாய் வளர்த்த ஆட்டை விற்று நிவாரண நிதி அளித்துள்ளார். ஆடு விற்றதன் மூலம்  கிடைத்த 5 ஆயிரத்து 510 ரூபாயை கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசரிடம், சுபைதா வழங்கினார். அவரது செயலுக்கு பலரும் பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்