பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் நிதியுதவி
பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்களின் 2 நாள் ஊதியம் உள்பட 100 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.


இஃப்கோ நிறுவனம் ரூ.25 கோடி நிதியுதவி :

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு இஃப்கோ நிறுவனம் 25 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, கிராமங்களில் தேவையான உதவிகளை செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல் அண்ட் டி நிறுவனம் ரூ.150 கோடி நிதியுதவி :

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் நிதியை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் எல். அண்ட் டி நிறுவனம் 150 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
Next Story