"நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4.14 கோடி பேர்" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஊரடங்கு உத்தரவால் புலம் பெயரும் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி வழக்கறிஞர்கள் 2 பேர் தாக்கல் செய்த பொது நல மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் புலம் பெயரும் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி வழக்கறிஞர்கள் 2 பேர் தாக்கல் செய்த பொது நல மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது. நிலவர அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் குறித்த வழக்கில் நிலவர அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் நான்கு கோடியே 14 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளனர் என்றும், நாடு முழுவதும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 22 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். கொரோனாவைவிட பயம் தான் மக்களை அதிகம் பாதித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story