பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டும் பின்பற்றாதது ஏன் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 100 க்கு மேல் உள்ள மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவு பின்பற்றப்படாத நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும்  உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது உத்தரவை ஏன் பின்பற்றாமல் இருக்கிறீர்கள்?  என மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள்  சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள மாவட்டங்களில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்