வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் விவகாரம்:உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிப்பு

டெல்லி போலீஸ் மற்றும் வழக்கறிஞர் இடையிலான மோதல் தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சீராய்வு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் விவகாரம்:உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிப்பு
x
கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற  வழக்கறிஞர்கள் - போலீஸ் மோதல் தொடர்பான சிறப்பு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நடத்தியது. இதில் மோதல் சம்பவம் தொடர்பாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும்  2 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.  இந்த வழக்கில் வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. உடனடியாக போலீசாருக்கு எதிரான உள் விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்