உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் - பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தர கோரிக்கை

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் - பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தர கோரிக்கை
x
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மதிமுக சார்பில் சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற உள்ளதாகவும், இந்த விழாவில் கலந்து கொள்ள பரூக் அப்துல்லா ஒப்புக்கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ள வைகோ, பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் வைகோ மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்