சகஜ நிலைக்கு திரும்புகிறது காஷ்மீர்...

காய்கறி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்படுகிறது.
x
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அங்குள்ள 3 ஆயிரத்து 697 ரேஷன் கடைகளில் 3 ஆயிரத்து 557 கடைகள் செயல்பட தொடங்கி உள்ளன என்றும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். -கள் செயல்பட தொடங்கி உள்ளதாகவும் காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. பக்ரீத் திருநாளையொட்டி உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க காஷ்மீரில் 300 சிறப்பு தொலைபேசி பூத்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்கறி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. மேலும், அடிப்படை சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்கள் செயல்பட தொடங்கி உள்ளதாகவும், போக்குவரத்து சீர்செய்யப்பட்டு மற்றும் விமான சேவை சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவருக்குமான சம்பளம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்