குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்ட மசோதா 2012-ல் திருத்தம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க ஏதுவாக உள்ள போக்சோ சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க ஏதுவாக உள்ள போக்சோ சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்பட இந்த மசோதா வழிவகை செய்யும். குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதனை வர்த்தக நோக்கில் செயல்பட்டாலும் அதிகப்படியான தண்டனை விதிக்கவும், அபராதம் விதிக்கவும் இந்த சட்ட மசோதா வழி வகை செய்யும். இதன் மூலம் போக்ஸோ சட்டம் 2012 பிரிவுகளில், கீழ் தற்போது சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
Next Story

