கிரண்பேடியின் வாட்ஸ்அப் படம் மாறிய ஆச்சரியம் : பேசுபொருளாக மாறிய கிரண்பேடியின் வாட்ஸ்அப் படம்

மாநில திட்டக்குழு கூட்டத்துக்கு யார் யாருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப் படமாக வைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கிரண்பேடியின் வாட்ஸ்அப் படம் மாறிய ஆச்சரியம் : பேசுபொருளாக மாறிய கிரண்பேடியின் வாட்ஸ்அப் படம்
x
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான திட்டக்குழு கூட்டம், கடந்த சனிக் கிழமை, ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. அப்போது, திமுக, அதிமுக, பாஜக உறுப்பினர்களை கூட்டத்துக்கு அழைக்குமாறு வழங்கிய கோப்புகள் குறித்து பதில் அளிக்காததால், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் வெளியேறினர். இதனால், கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. யார் வேண்டுமானாலும் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என கூறி முதலமைச்சர், யார் யாரை அழைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அழைப்பு விடுக்கப்பட வேண்டிய அரசு உத்தரவை தமது வாட்ஸ்அப் படமாக கிரண்பேடி வைத்துள்ளது, அதிகாரிகள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்