அரசு பள்ளியை சுற்றி கழிவுநீர் - மூக்கை பிடித்து கொண்டு கடக்கும் மாணவர்கள்

புதுச்சேரியில் கழிவுநீர் சூழ்ந்த நிலையில் இயங்கும் அரசுப் பள்ளியால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.
x
புதுச்சேரியில் கழிவுநீர் சூழ்ந்த நிலையில் இயங்கும் அரசுப் பள்ளியால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். 

புதுச்சேரியை அடுத்த கொம்பாக்கம் ஒட்டம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவகிள் படித்து வருகின்றனர். ஓட்டம்பாளையம் பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. 

இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கழிவுநீர் சூழ்ந்த பகுதிக்கு அருகே மாணவர்கள் சாப்பிடும் சூழலும் உள்ளதால் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. 

கழிவுநீர் தேங்கி நிற்பதால் விஷப் பூச்சிகளும் உலா வருவதால் மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்