திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்கிழமை அதிகாலை வைகுண்டவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக முதல் நாளான இன்று பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பால், மற்றும் உணவு, தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வந்துள்ள பக்தர்கள் தங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நாளை காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்