செல்வாக்குமிக்க இந்திய பிரபலங்கள் யார்... யார்...?

செல்வாக்குமிக்க இந்திய பிரபலங்கள் யார்... யார்...?
செல்வாக்குமிக்க இந்திய பிரபலங்கள் யார்... யார்...?
x
'YouGov Influencer Index 2018' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பாலிவுட் மற்றும் விளையாட்டுத் துறையில் செல்வாக்கு மிக்க இந்திய பிரபலங்களின் டாப்-10 பட்டியலில், நடிகர் அமிதாப் பச்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம், ஆன்-லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில்,  நடிகை தீபிகா படுகோனே 2ஆம் இடம் பிடித்துள்ளார். இதில், பெண் பிரபலம் என்ற வகையில், நடிகை தீபிகா படுகோனே முதலிடத்தில் உள்ளார்.

இவர்கள் இருவரும், அனைத்து வயதினராலும் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 'நுகர்வோர் உணர்வுகள்' என்ற அடிப்படையில் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. உடல் நலம், தொழில்நுட்பம், ஆடை மற்றும் ஆபரணங்கள், உணவு, நிதி சேவைகள் ஆகியவற்றுடன் விழிப்புணர்வு, நம்பகத்தன்மை மற்றும் செல்வாக்கை, ஆய்வு செய்து, இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதில், கிரிக்கெட் வீரர்கள் தோனி 3வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கள் 4வது இடத்திலும் உள்ளனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி 6வது இடத்தில் உள்ளார். 5வது இடத்தை நடிகர் அக்சய் குமார் பெற்றுள்ளார். அமீர் கானும், ஷாருக்கானும் முறையே 7வது மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ளனர். நடிகைகள் ஆலியா பட் 9வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர். 

திரை பிரபலங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் என்பதையும் தாண்டி, இந்த பட்டியலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 15வது இடத்தைப் பெற்றுள்ளார். பிரபல வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களின், தூதுவராக இந்த பிரபலங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது, நுகர்வோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்