மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
x
பிரதமர் மோடி இரங்கல் 

ஆனந்தகுமார் தனது விடாமுயற்சியாலும், இரக்க குணத்தாலும் சமூகத்துக்கு சேவை செய்ததாக  அவர் கூறியுள்ளார்.  நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக ஆனந்தகுமார் எப்போதும் மக்கள் மனதில் நிறைந்திருப்பார் என்றும் மோடி தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த நிர்வாகியாகவும், பாஜகவின் சொத்தாகவும் இருந்த அனந்தகுமாரின் மறைவால் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இரங்கல்

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார், அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க நிர்வாகியாக இருந்தார் என, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அவரது மறைவு, இந்திய அரசியல் மற்றும் பாஜகவில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதை யாராலும் நிரப்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் இரங்கல்

சிறந்த நாடாளுமன்றவாதியான அனந்தகுமார் மறைவு தன்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அவரது மறைவு நாட்டுக்கும், குறிப்பாக கர்நாடக மாநில மக்களுக்கும் பேரழிப்பாகும் எனக் கூறியுள்ள ராம்நாத் கோவிந்த், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

நெருங்கிய நண்பரான மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவு அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளித்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்கான அவரது செயல்பாடு மற்றும் பக்தி பாராட்டுக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
Next Story

மேலும் செய்திகள்