மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 74வது பிறந்த நாள்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 74வது பிறந்த நாள்
x
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு,டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்."விர் பூமியில்" உள்ள அவரது நினைவிடத்தில்,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜிவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி,அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி,அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை  செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்