சாலையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கார் - தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை படகில் சென்று மீட்ட மீட்புப் படையினர்

கர்நாடகா மாநிலத்தில், சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் காரில் சிக்கிக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சாலையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கார் - தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை படகில் சென்று மீட்ட மீட்புப் படையினர்
x
கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு கடந்த 6 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைகாவிரிக்கு காரில் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர், பாகமண்டலா என்ற இடத்தில், சாலையில் பெருக்கெடுத்த காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மீட்புப்படையினர் படகு மூலம் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 

காட்பாடி, அணைக்கட்டு பகுதிகளில் பலத்த மழை

வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக காட்பாடி, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

சென்னையில் மழை...

சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்தது. வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், அடையாறு, மைலாப்பூர்  உள்ளிட்ட இடங்களில் மாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் அலுவலகங்களில் இருந்து வீடுகளுக்கு செல்வோர் அவதிபட்டனர். சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்