தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்

13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்
x
13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த டி.கே. ராஜேந்திரன், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய கூட்டத்தை கலைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக குறிப்பிட்டு உள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இதுதவிர, ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களை காப்பாற்றவும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக டிஜிபி - டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெறுவதால், சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும் தமது மனுவில், டிஜிபி - டி.கே. ராஜேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்