தந்தி டிவியின் தாக்கம் | நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை
நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை
நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : மருத்துவ குழு நேரில் விசாரணை

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக
பணிக்கு வராததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த ஒரு பெண்ணுக்கு காவலாளி சிகிச்சை அளித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழவினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
Next Story