எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகருக்கு, ஜாமின் வழங்கப்பட்டுள்ளது
எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
x
எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில், சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.  இதையடுத்து, முன் ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்,  எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.   இதனால், சென்னை எழும்பூரில் உள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜரானார்.   அப்போது, எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஜூலை 18ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்