தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ..சேலத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ.. சேலத்தில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை ஓமலூர் மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு சில மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது. இதையடுத்து , அவர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்ததன் பேரில், அதே பள்ளியில் பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டம் வடுகன்பட்டியை சேர்ந்த 43 வயதான ஆசிரியர் தங்கவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்‌. போலீஸ் விசாரணையில் அவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்தது தெரிய வந்ததை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || "பல உயிர்களை காவு வாங்கிய அமோனியா கசிவு ஆலைக்கு சீல்" - அதிரடி ஆக்‌ஷன்

Senthilbalaji | DMK | ``நலிவடைந்த மின்துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின்..'' | அடுக்கிய செந்தில்பாலாஜி

High Court | Ponmudi | பொன்முடி வழக்கின் தீர்ப்பு.. ஹைகோர்ட் போட்ட உத்தரவு

Breaking | CM Vijay | ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைக்கும் CM விஜய் | மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..

Breaking | PM Modi | Amazon | இந்தியாவில் கோடிகளை இறக்கும் அமேசான் | அமேசான் சி.இ.ஓ மெகா அறிவிப்பு