#Tiruchendur #TiruchendurMuruganTemple #TiruchendurTheft #CCTV #ThanthiTV
Tiruchendur | திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் கை வைத்த பூசாரி - காட்டிக் கொடுத்த சிசிடிவி.. பக்தர்கள் அதிர்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடியதாக அர்ச்சகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மூலவர் சன்னதி எதிரே உள்ள நிரந்தர உண்டியலில் காணிக்கை எண்ணும்போது பணம் குறைவாக இருந்ததால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருட்டு சம்பவம் அம்பலமானது. இதில், கோவில் அர்ச்சகர் முருகன் என்கிற முகுந்தன் மற்றும் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். துணி மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி உண்டியலில் இருந்து பணத்தை எடுத்ததாகவும், சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை திருடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.