BREAKING || திருவாரூரில் பயங்கரம் - 7 பவுன் நகைக்காக எமனாக மாறிய கலெக்டர் ஆபீஸ் ஊழியர்
#tiruvarur | #crimenews | #police
BREAKING || திருவாரூரில் பயங்கரம் - 7 பவுன் நகைக்காக எமனாக மாறிய கலெக்டர் ஆபீஸ் ஊழியர் திருவாரூர் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை.. போலீசாருடன் சேர்ந்து குற்றவாளியை தேடுவதுபோல் நடித்த மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலைசெய்யும் நபர் கைது நகைகள் பறிமுதல் திருவாரூர்அருகே நகைக்காக மூதாட்டிஅடித்து கொலை செய்யப்பட்டார் போலீசாருடன் சேர்ந்து குற்றவாளியை தேடுவது போல் நடித்த வாலிபர் கொலை செய்தது தெரியவந்ததால் போலீசார் வாலிபரை கைதுசெய்து நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல்சரகத்திற்கு உட்பட்ட உத்தாணி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி இவரது மனைவி கலைச்செல்வி வயது60 கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில் இவருக்கு இரண்டுமகள்கள் இருவரும் திருமணம் ஆகி அவரவர் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர் கலைச்செல்வி உத்தாணி பகுதியில் வசித்துவருகிறார் மாதத்தில் பெரும்பாலும் மகள்கள் வீட்டுக்கு சென்று வந்த நிலையில் அவ்வப்போது வீட்டில் தங்கி வந்துள்ளார் இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபொழுது வீட்டிற்கு வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அவரை இரும்புகம்பியால் தாக்கி கொலை செய்ததுடன் மூன்று பவுன் செயின், தோடு, மாட்டல் மற்றும் வளையல், மோதிரம், என ஏழுலட்ச ரூபாய் மதிப்புள்ள 7பவுன் நகைகளை திருடிச்சென்றுள்ளான் மகள்கள் மூதாட்டிக்கு போன் செய்தபொழுது அவர் எடுக்காததனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை சென்று பார்க்க சொல்லியதால் அவர்கள் பார்த்தபோது மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது உடனடியாக வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு சிசிடிவி மற்றும் கைரேகை நிபுணர்கள் கொண்டு விசாரித்து வந்த போலீசார் அவர்களுடன் தேடுவதுபோல் நடித்துவந்த ஒரு வாலிபரின் மீது சந்தேகப்பட்டு அவரைபிடித்து விசாரணை செய்ததில் அவர் மூதாட்டிக்கு பரீட்சையமானவர் என்றும் அவரை நீண்ட காலமாக நகைக்காக நோட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது அவர் தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வரும் பாபநாசம் சுந்தரபெருமாள் கோவில்தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் அறிவுமணி வயது 40 என்பதும் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால் கடன்பிரச்சனையில் மூதாட்டியை கொலைசெய்து நகை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து அறிவுமணி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர் மேலும் அவன் திருடிய 7சவரன் நகை மீட்கப்பட்டது கொலையாளி அறிவுமணிக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளனர் மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற உடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சதீஷ்குமார் துணை காவல்கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆய்வாளர் ரேகாராணி உள்ளிட்ட போலீசார் சம்பவஇடத்திலேயே இருந்து குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
