இந்தியா

கர்நாடகா சிவில் சர்வீஸ் தேர்வு - தாலியை கழட்ட சொன்ன அதிகாரிகள்

தந்தி டிவி

கார்நாடக மாநிலத்தில் குடிமைத் தேர்வு எழுதச் சென்ற திருமணமான பெண்களின் தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை கழற்ற தேர்வறை கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றன. தேர்வு எழுதச் சென்ற திருமணமான இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள், கடும் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக மாநில பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தேர்வறை கட்டுப்பாடு என்ற பெயரில், திருமணமான இந்து பெண்களின் தாலி, கருகமணி, மெட்டி உள்ளிட்டவற்றை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. ஹிஜாப் பெண்களை சோதித்து அனுப்பியது போல, இந்து பெண்களையும் சோதித்து அனுப்பி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி