தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுடன் பேஸ்புக்கில் பழக்கம்.. ஆசை வார்த்தையை நம்பி கோவை சென்ற 17 வயது சிறுவன் | Kovai

தந்தி டிவி

சமூக வலைதளம் மூலம் திருநங்கைகளுடன் ஏற்பட்ட பழக்கத்தில், கோவை வரவழைக்கப்பட்டு திருநங்கை கும்பலில் சிக்கிய இளைஞரை புகாரின் அடிப்படையில் போலீசார் மீட்டுள்ளனர்.

திருநெல்வெலி மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது இளைஞர். இவர் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், பேஸ்புக் மூலம் திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டம் சூகூர் பள்ளப்பாளையத்தை சேர்ந்த கும்பல் ஒன்றுடன் வாட்ஸ் ஆப்பில் இளைஞர் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், இளைஞரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கும்பல் சூலூர் வரவழைத்ததாக கூறப்படுகிறது. இதில் சூலூர் வந்த இளைஞரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை கும்பல் பறித்தும், பெண்கள் அணியும் ஆடைகளை கொடுத்தும் இரவு நேரங்களில் சாலையில் நிற்க வைத்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இளைஞரை வெளியில் செல்ல விடாமல் கும்பல் தடுத்த நிலையில், அருகில் இருந்தவரின் செல்போன் மூலம் தன்னை காப்பாற்றும்படி வாட்ஸ் அப்பில் தந்தையிடம் இளைஞர் பேசிய ஆடியோ வெளியானது. இதையடுத்து, சூலூர் வந்த குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில் கும்பலை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், கும்பலிடம் இருந்து 2 சவரன் நகைகளை கைப்பற்றி, இளைஞரை மீட்டு பெற்றோருடன் அனுப்பு வைத்தனர்.

BREAKING || "பல உயிர்களை காவு வாங்கிய அமோனியா கசிவு ஆலைக்கு சீல்" - அதிரடி ஆக்‌ஷன்

Senthilbalaji | DMK | ``நலிவடைந்த மின்துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின்..'' | அடுக்கிய செந்தில்பாலாஜி

High Court | Ponmudi | பொன்முடி வழக்கின் தீர்ப்பு.. ஹைகோர்ட் போட்ட உத்தரவு

Breaking | CM Vijay | ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைக்கும் CM விஜய் | மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..

Breaking | PM Modi | Amazon | இந்தியாவில் கோடிகளை இறக்கும் அமேசான் | அமேசான் சி.இ.ஓ மெகா அறிவிப்பு