Donald Trump | ``அமெரிக்கா மீறுகிறது’’ - ஐ.நா. பொதுச் செயலாளர்வருத்தம்..
அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக நடத்திய ராணுவ நடவடிக்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளன என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் செயல் ஐ.நா. சாசனத்திற்கு எதிரானது என வெனிசுலா அரசு குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டிய அவர், நாடுகளின் இறையாண்மை, மற்றும் எல்லை ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்."