இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 'பழிக்குப்பழி' என தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களை இதோடு நிறுத்தி கொண்டு, அனைத்தையும் சரி செய்து கொள்வதை தாம் பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவில் இருப்பதாக தெரிவித்துள்ள டிரம்ப் , தமக்கு இரு நாடுகளையும் நன்றாக தெரியும் என்றும் கூறினார். இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த அவர் , "தம்மால் ஏதாவது உதவ முடிந்தால் தாம் அதனை செய்யவும் தயார்" என தெரிவித்துள்ளார்.