Trump | US Army | ``கிறிஸ்தவர்கள் கொலை’’ - டிரம்ப் எச்சரிக்கை

Update: 2025-11-03 09:16 GMT

``கிறிஸ்தவர்கள் கொலை’’ - டிரம்ப் எச்சரிக்கை நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் குறிவைத்துக் கொலை செய்யப்படுவதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இதே நிலை நீடித்தால் அந்நாட்டில் அமெரிக்கா ராணுவம் களமிறங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், கிளர்ச்சியாளர்களால் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சினையை தீவிரமாக கருதிய டிரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினால், அமெரிக்க ராணுவம் அந்நாட்டுக்குள் புகுந்து நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை வரவேற்ற நைஜீரிய அரசின் செய்தித் தொடர்பாளர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அமெரிக்க அரசின் உதவி தங்களுக்கு தேவை என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்