Putin| Trump | ``எத்தனை பேர் சாவாங்கனே தெரியாது’’ - எச்சரிக்கை மணி அடித்த டிரம்ப்

Update: 2025-12-29 02:54 GMT

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக தெரிவித்தார்.

போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், இல்லையெனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ரஷ்ய அதிபர் புதினும் ஆர்வமாக இருப்பதாக, டிரம்ப் தெரிவித்தார்.

இதனிடையே, ஜெலன்ஸ்கியுடனான சந்திப்புக்கு முன்பாக, ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

அப்போது ஆக்கப்பூர்வமான, பயனுள்ள விவாதங்களை ​​புதினுடன் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்