Trump | Maduro | Kamala Harris | வெனிசுலா அதிபர் கைது-கமலா ஹாரிஸ் கண்டனம்
வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்... இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் வெனிசுலாவில் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவை பாதுகாப்பதாவோ வலிமையானதாகவோ மாற்றவில்லை என்றும், மதுரோ ஒரு சர்வாதிகாரி என்பதால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மை மாறிவிடாது என கண்டித்துள்ளார்... அத்துடன் ஆட்சி மாற்றத்திற்காக அல்லது எண்ணெய்க்காக நடத்தப்படும் போர்கள் குழப்பமாக மாறும் எனவும் எச்சரித்துள்ளார்.